Friday, March 27, 2009

1000 துணை நடிகர்களுடன் ரஜினி, ஐஸ்வர்யா நடனம்


சென்னை, மார்ச். 7-

ரஜினியின் “எந்திரன்” படப்பிடிப்பு இரு மாதங்கள் விறுவிறுப்பாக நடந்தது. வேலூர், சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி, ஆய்வு கூடத்தில் ரோபோவை உருவாக்கும் காட்சிகள், சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டில் அதை அறிமுகம் செய்யும் சீன்கள் போன்றவை எடுக்கப்பட்டன. வெளிநாட்டில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. ஓரிரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஐதராபாத்தில் பிரமாண்ட பாடல் காட்சியொன்றை படமாக்கப்பட உள்ளது. “முதல்வன்” படத்தில் இடம் பெறும் “முதல்வனே வனே வனேவனே வனே முதல்வனே” என்ற பாடல் சாயலில் இது எடுக்கப்படுகிறது. 1000 துணை நடிகர்கள்-நடிகைகள் இதில் ஆடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ரஜினியும் ஐஸ்வர்யாராயும் நடனம் ஆடுகிறார்கள்.
துணை நடிகர்கள் “ரோபோ” காஸ்ட்யூம் அணிந்து இதில் ஆடுகின்றனர். இதற்கான பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மதுஸ்ரீ பாட பதிவு செய்யப்பட்டது.
இயக்குனர் ஷங்கர் பாடல்காட்சிகளில் அக்கறை காட்டுவார். பாட்டும், டான்சும் தனித்துவமாய் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார். “அன்னியன்” படத்தில் “ரண்டக்க ரண்டக்க” பாடல் மற்றும் சிவாஜியில் “வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி” பாடல் சாயலில் இந்த “எந்திரன்” பாட்டு உருவாகிறது. இப் பாட்டுக்காக கூடுதல் செலவு செய்யப்படுகிறது. பாடல் காட்சி படமாக்கப்படும் இடத்தை இயக்குனர் ஷங்கர் ஐதராபாத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த பாடலை கவர்ச்சியாக எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு அதற்கேற்ற மாதிரி ஆடைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. படத்தின் “டைட்டில்” பாடலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

சினிமா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates