Friday, March 27, 2009

காதலிப்பதாக “என்பின்னால் அலைந்தவர்கள்” -நயன்தாரா



சென்னை, மார்ச். 28-

காதல் தோல்வியில் இருந்து மீண்டுள்ளார் நயன்தாரா. சிறுவயதிலிருந்தே சர்ச்சைகள் துரத்தியுள்ளன. கடைசியாக அவரை வருத்திய சம்பவம் “பையா” பட விவகாரம். சம்பள பிரச்சினையால் அதிலிருந்து விலகினார். தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடைபோட்டது. இப்போது சமரசமாகி தடை விலக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் ஆதவனில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.
காதலிப்பதாக தன் பின்னால் அலைந்தவர்கள் பற்றி மனம் திறந்தார் நயன்தாரா. அவர் சொல்கிறார்...
சிறு வயதிலேயே காதல்கள் என்னை துரத்தியுள்ளன. மனதை வருத்தவும் செய்துள்ளன.
அப்போது என் தந்தை விமானப்படையில் இருந்தார். நான் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் படித்தேன். குஜராத்தில் நான் மூன்றாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது என் டேபிளில் தினமும் ஒரு ரோஜாபூவும், ஒரு கடிதமும் இருக்கும். அதில் நான் உன்னை காதலிக்கிறேன் என்று எழுதப்பட்டு இருக்கும்.
இது பல நாட்கள் தொடர்ந்தது. என் வகுப்பு ஆசிரியரிடம் இதை சொன்னேன். அவர் சீரியசாக எடுத்துக்கொள்ள வில்லை.
ஒரு நாள் ரோட்டில் சாக்பீசால் பெரிய எழுத்தில் “டயானா” நான் உன்னை காதலிக்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது. என் பெற்றோருக்கு தெரிந்து கோபப்பட்டனர். எனது தாயார் பள்ளிக்கே வந்து விட்டார். விசாரணை நடத்திய போது 6-ம் வகுப்பு படித்த பையன் ஒருவன் எழுதியது தெரிந்தது. என்னை காதலிப்பதாக சொன்னான்.
இரண்டாவது காதல் சம்பவம் நான் 9 வது வகுப்பு படித்த போது நடந்தது. உயரமான அழகான பையன் என்னை கலங்கடித்தான். நானும் அவனும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஒரு நாள் தனியாக பேச வேண்டும் என்று என்னை அழைத்தான். நான் என்னுடன் தோழி ஒருத்தியை அழைத்து சென்றேன். அவன் என்னை காதலிப்பதாக துணிச்சலாக சொன்னான். எனக்கு ரொம்ப கோபம் வந்தது. எனக்கு உன்மேல் காதல் இல்லை என்று சொன்னேன். அன்றில் இருந்து அவனோடு பேசுவதையே நிறுத்தினேன்.
அப்புறம்தான் பிரச்சினை ஆரம்பமானது அந்த பையன் தற்கொலைக்கு முயற்சித்தான். அதிர்ஷ்டவசமாக அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டனர். அவன் தாயார் ரொம்பவும் அதிர்ச்சியானார். அவர் என்னிடம் தனது மகன் உயிரை காப்பாற்று என்று கெஞ்சினார். அந்த பையனோட பேசுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் அதை ஏற்றேன். பிறகு சகஜ நிலைக்கு வந்தான். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.

0 comments:

Post a Comment

சினிமா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates