மின்னஞ்சலில் வந்த மிஸ் சென்னை சம்யுக்தாவின் படங்களைப் பார்த்ததும் தம்பி விக்கியின் நினைவு தான் வந்தது. கொஞ்ச நாளா கொஞ்சம் மருத்துவம், சமூகம் என சீரியஸ் விஷயங்களையே பேசிக்கொண்டிருந்ததால், ரொம்ப சீரியஸா எழுதறீங்களே கொஞ்சம் மொக்கை போட வசதியா ஒரு பதிவு போடுங்களேன் என்று கேட்டிருந்தான்.
(இன்னும் திருமணமாகாத) அவனுக்கான ஒரு சிறப்புப் பதிவு இந்தப் படங்கள்.
இந்தப் பெண்ணின் பெற்றோருக்கு எனது பாராட்டுகள் !
(கவிதை நல்லா இருந்தா எழுதறவனைப் பாராட்டுறது தானே முறை )
வெறும் படம்னா எப்படி, ஒரு நாலு வரிக் கவிதையாச்சும் வேண்டாமா ?
இல்லை என்றால் தாங்காது - மனம்
குருவி சேர்த்த சிறு கூடு
வெப்பம் வீசிப் போகாதே இது
பனியில் செய்த சிறு வீடு.
காதல் மட்டும் இல்லை என்றால்
பூக்கள் கூடச் சிரிக்காது,
நீ காதல் இல்லை என்றால் கண்ணே
கண்ணீர் பயணம் நிற்காது.
இப்படித் துவங்கும் இதயமாற்றம்
எப்படி முடியும் நானறியேன் - உன்
பொன்னடிப்பாத மண்ணடிச் சுவட்டில்
எப்படிப் புதைந்தேன் நானறியேன்.
இரு சிரிப்புக் கிடையே நீ மூச்சு விடு கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சுக்குள் காதல் மொழி கெஞ்சும்
ஒரு யுகத்தின் காலடியில் ஓரே கவிதை மிஞ்சும்
இருந்தாலும் உன் அழகில் போட்டியிட அஞ்சும்.
வெட்டிச் செல்லும் மின்னல் தன்னில்
உன்னைக் காண்கிறேன் - நீ
கொட்டிச் சென்ற காதல் மண்ணில்
பூக்கக் காண்கிறேன்.
சொக்கும் மணத்தின் சொந்தக்காரி - எனில்
விக்கல் வார்க்கும் வித்தைக்காரி.
கோடிக் கரத்தால் என்னை வாரி - உயிர்
மூடிக் காக்கும் பந்தக்காரி.
புன்னகை கொண்டு பேசடியே - இது
மொட்டுக்கள் நடத்தும் மாநாடு
நீ சிரித்து முடித்த பின்புதான் அவை
பூக்கப் போவதாய் ஏற்பாடு.
இறுதி மூச்சும் உந்தன் பெயரை
சொல்லிச் சொல்லி சூடாகும்,
நீ சொல்லில் சொல்லாக் காதலுக்கு
எந்த வார்த்தை ஈடாகும் ?
0 comments:
Post a Comment