பழிவாங்கும் ஆவிகள் கதை...
அடுக்குமாடி குடியிருப்பில் புதுவீடு வாங்கி தாய் சரண்யா, மனைவி நீதுசந்திராவுடன் குடியேறுகிறார் மாதவன். அண்ணன் குடும்பத்தினரும் அவருடன் வசிக்கின்றனர்.
வீட்டில் நடக்கும் விநோத நிகழ்வுகள் அவரை பயமுறுத்துகிறது. டெலிவிஷனில் யாவரும் நலம் தொடரில் வரும் சம்பவங்கள் தனது குடும்பத்திலும் நடப்பது கண்டு திகைக்கிறார்.
ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டர் மூலம் நடப்பவை பேய்களின் கைங்கரியம் என உணர்கிறார். ஒரு கட்டத்தில் தொடரில் வரும் கதாபாத்திரங்கள் கோடூரமாய் கொல்லப்படுகின்றனர். அதுபோல் தனது குடும்பத்தினரும் சாகடிக்கப்படலாம் என அஞ்சுகிறார். அவர் பயந்த மாதிரியே ஒருவன் வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினரை கொல்ல பாய்கிறான். அவர்களை மாதவன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ்...
வெள்ளை சேலை மோகினிகள் கோர உருவங்கள் நாய், நரி, உளளைகள் பாய்ச்சி என்ற வழக்கமான பார்முலா இல்லாத “ஹைடெக்” பேய் படம். பயத்தை ஸ்லோமோஷனில் ஏற்படுத்தி போக போக சீட் நுனிக்கு நகர வைத்து நடுங்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் விக்ரம் கே.குமார். தமிழ் சினிமா இதுவரை பார்க்காத புது திகில் கதையை சொல்லி திகில்படுத்தியுள்ளார்.
லிப்ட்டில் ஆபிஸ் புறப்பட தயாராகும் மாதவன் அது வேலை செய்யாததை பார்த்து படிகட்டில் இறங்க மறுநொடியே லிபட் இயங்குவது முதல் உதறல்..
டி.வி. தொடரில் வருவதுபோல் அண்ணனுக்கு சம்பள உயர்வு கிடைப்பது... மனைவி கர்ப்பமாவது... பிறகு கீழே விழுந்து கருகலைவது... இதய துடிப்பை எகிற வைக்கிறது.
யாவரும் நலம் தொடரில் வரும் சம்பங்கள் குடும்பத்தில் நடப்பது எப்படி என்பதை அறிய அத்தொடர் படமாகும். ஸ்டுடியோவுக்கு சென்று பார்க்கும்போது அங்கு கேம்ஷோ நடப்பதை கண்டு அதிர்வதும் தன் வீட்டு டி.வி.யில் மட்டும் அத்தலைப்பில் வேறுமாதிரி நடிகர்களும் கதையும் நகர்வது அறிந்து உறைவதும் குலைநடுங்க வைக்கிறது.
டி.வி. தொடரில் கொலை ஆயுதத்துடன் தன் உருவத்தை பார்த்து குடும்பத்தை கொல்லப்போகும் கொலையாளி நான் தான் என நண்பனிடம் சொல்லி அறைக்குள் அடைத்து பூட்ட வைப்பது...
பிறகு நிஜகொலைகாரன் தன்னால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட டாக்டர் என்பதை அறிந்து பிடிக்க அறைக்குள்ளேயே அலறிதுடிப்பது திகிலின் உச்சம்...
பல வருடங்களுக்கு முன் டாக்டரால் கொல்லப்பட்டவர்கள் டி.வி. தொடர்கதாபாத்திரங்களாக வந்து கொலையாளிகயை பழிதீர்ப்பதாக கதையை முடிப்பது கைகுலுக்க வேண்யடிய டைரக்டரின் புத்திசாலித்தனமான புது சிந்தனை.
மாதவன் பாத்திரத்துக்கு கச்சிதமாய் பொருந்தகிறார். பயத்தை முகத்தில் பிரதிபலிக்கும் விதம் அற்புதம்... சரண்யா நீது சந்திரா பார்வையற்ற முதியவராக வரும் சட்டர்ஜி, மனநோயாளி, போலீஸ் அதிகாரி என அனைத்து கேரக்டர்களும் வலுவாக செதுக்கப்பட்டுள்ளன. பல அடுக்கு குடியிருப்பில் வேறு குடித்தனங்களை காட்டாதது ஆங்கில பேப்பரில் தமிழ் எழுத்துக்கள் வருவது என்ற சிறுசிறு குறைகள் விறுவிறுப்பான கதையில் மறக்கடிக்க செய்கின்றன.
பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு ஹீரோ, காட்சிகளை ஜீவன் இழையோட அள்ளி தெளிக்கிறார். டப்பி-பரீக்கின் பின்னணி இசையும் மிரட்டுகிறது.
ஹாலிவுட் சாயலில் ஒரு திகல் படம்.
0 comments:
Post a Comment