Friday, March 27, 2009

1000 துணை நடிகர்களுடன் ரஜினி, ஐஸ்வர்யா நடனம்


சென்னை, மார்ச். 7-

ரஜினியின் “எந்திரன்” படப்பிடிப்பு இரு மாதங்கள் விறுவிறுப்பாக நடந்தது. வேலூர், சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி, ஆய்வு கூடத்தில் ரோபோவை உருவாக்கும் காட்சிகள், சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டில் அதை அறிமுகம் செய்யும் சீன்கள் போன்றவை எடுக்கப்பட்டன. வெளிநாட்டில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. ஓரிரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஐதராபாத்தில் பிரமாண்ட பாடல் காட்சியொன்றை படமாக்கப்பட உள்ளது. “முதல்வன்” படத்தில் இடம் பெறும் “முதல்வனே வனே வனேவனே வனே முதல்வனே” என்ற பாடல் சாயலில் இது எடுக்கப்படுகிறது. 1000 துணை நடிகர்கள்-நடிகைகள் இதில் ஆடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ரஜினியும் ஐஸ்வர்யாராயும் நடனம் ஆடுகிறார்கள்.
துணை நடிகர்கள் “ரோபோ” காஸ்ட்யூம் அணிந்து இதில் ஆடுகின்றனர். இதற்கான பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மதுஸ்ரீ பாட பதிவு செய்யப்பட்டது.
இயக்குனர் ஷங்கர் பாடல்காட்சிகளில் அக்கறை காட்டுவார். பாட்டும், டான்சும் தனித்துவமாய் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார். “அன்னியன்” படத்தில் “ரண்டக்க ரண்டக்க” பாடல் மற்றும் சிவாஜியில் “வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி” பாடல் சாயலில் இந்த “எந்திரன்” பாட்டு உருவாகிறது. இப் பாட்டுக்காக கூடுதல் செலவு செய்யப்படுகிறது. பாடல் காட்சி படமாக்கப்படும் இடத்தை இயக்குனர் ஷங்கர் ஐதராபாத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த பாடலை கவர்ச்சியாக எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு அதற்கேற்ற மாதிரி ஆடைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. படத்தின் “டைட்டில்” பாடலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்லம்டாக் மில்லினர் நாயகிக்கு அதிர்ஷ்டம் ஜேம்ஸ்பாண்ட்டுடன் நடிக்க


சென்னை, மார்ச். 14-

ஆஸ்கார் விருதுகளை அள்ளி குவித்த ஸ்லம்டாக் மில்லினர் பட கதாநாயகி உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார். மும்பையை சேர்ந்த இவருக்கு இந்திப்பட வாய்ப்புகள் குவிகிறது. நிறைய விளம்பர படங்களில் நடித்தும் பணம் குவிக்கிறார்.
ஹாலிவுட் நடிகர் கேட்வின்ஸ்லட்டுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆஸ்கார் விருது விழா முடிந்ததுமே இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அமெரிக்காவின் பிரபல இயக்குனர் உட்டி ஆலனும் தனது அடுத்த படத்துக்கு பிரீட்டாவை ஒப்பந்தம் செய்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் பேஷன் ஷோக்களில் பங்கேற்கவும் பிரீட்டாவை அழைக்கின்றனர். இவர் ஏற்கனவே மும்பையில் மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துக்கும் மேலாக தற்போது ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்கவும் பிரீட்டாவுக்கு அழைப்பு வந்துள்ளது. இப்படத்தின் கேரக்டருக்காக அவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது.
ஜேம்ஸ் பாண்ட் படத் தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த தற்காக மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் பிரீட்டா. ஆங்கில பட அழைப்புகளால் இந்திப் படங்களில் நடிப்பதை அவர் தள்ளி வைத்துள்ளாராம்

ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார் வில்லனாக நடிக்கும் ஆர்யா

சென்னை, மார்ச். 18-

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்த பின் ஆர்யா சம்பளத்தை உயர்த்திவிட்டார். ரூ.2 கோடி வரை சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது திரிஷாவுடன் நடித்து வரும் “சர்வம்” படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மதராசபட்டினம் என்ற படத்திலும் நடிக்கிறார்.

இதற்கிடையில் தெலுங்கு படமொன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நான் கடவுள் படம் தெலுங்கில் “நாணு தேவுடு” என்ற பெயரில் டப்பிங் ஆகியுள்ளது. இதையடுத்து தெலுங்கு திரையுலகில் ஆர்யாவுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. அல்லு அர்ஜுன் கதா நாயகனாக நடிக்கும் படமொன்றில் வில்லனாக நடிக்க ஆர்யா ஒப்புக் கொண்டுள்ளார். வருகிற 21-ந்தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. இப்படத்துக்கு ஆர்யா கணிசமான தொகை சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளர் கேட்ட தொகையை கொடுக்க ஒப்புக் கொண்டதால் நடிக்க சம்மதித்து உள்ளாராம்.

விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? -தமன்னா


சென்னை, மார்ச். 27-
கேடி, வியாபாரி, கல்லூரி, நேற்று இன்று நாளை, படங்களில் நடித்தவர் தமன்னா. படிக்காதவன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். தற்போது சூர்யா ஜோடியாக அயன் படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த தாண்டவம், பரத்ஜோடியாக கண்டேன் காதலை, கார்த்தி ஜோடியாக பையா என மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன.
இதில் பையா படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. சம்பள பிரச்சினையால் நயன்தாரா நடிக்க மறுத்து ஒதுக்கினார். உடனே தமன்னா அப்படத்தை தட்டி பறித்துக்கொண்டார். குறைந்த சம்பளத்தில் நடிக்க சம்மதித்து இந்த வாய்ப்பை பெற்றார். இதனால் நயன்தாராவின் கோபத்துக்கு ஆளாகி இருப்பதாக செய்தி பரவியுள்ளது.
இது போல் விஜய் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் உதறினார். விஜய் தற்போது வேட்டைக்காரன் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்குதான் தமன்னாவை அழைத்ததாக கூறப்படுகிறது. அவர் மறுத்ததால் அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுபற்றி தமன்னாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
நயன்தாரா நடிக்க மறுத்ததால்தான் பையா படத்தில் நடிக்கிறேன் எனக்கு ஒரு சென்டி மென்ட் உண்டு. அதாவது மற்றவர்கள் தவறவிட்ட வாய்ப்புகள் எனக்கு அதிர்ஷ்டமாக மாறி உள்ளன. அந்த வகையில் நயன்தாராவிடம் இருந்து கைநழுவிய வாய்ப்புதான் பையா படம். அது சூப்பர் ஹிட் படமாக அமையும் என்பது சந்தேகம் இல்லை.
விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது உண்மை தான். ஆனால் நான் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அவருடன் நடிக்க இயலவில்லை. அந்த வாய்ப்பு நழுவி போய்விட்டது. ஆனாலும் மீண்டும் அவருடன் நடிக்க சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காதலிப்பதாக “என்பின்னால் அலைந்தவர்கள்” -நயன்தாரா



சென்னை, மார்ச். 28-

காதல் தோல்வியில் இருந்து மீண்டுள்ளார் நயன்தாரா. சிறுவயதிலிருந்தே சர்ச்சைகள் துரத்தியுள்ளன. கடைசியாக அவரை வருத்திய சம்பவம் “பையா” பட விவகாரம். சம்பள பிரச்சினையால் அதிலிருந்து விலகினார். தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடைபோட்டது. இப்போது சமரசமாகி தடை விலக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் ஆதவனில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.
காதலிப்பதாக தன் பின்னால் அலைந்தவர்கள் பற்றி மனம் திறந்தார் நயன்தாரா. அவர் சொல்கிறார்...
சிறு வயதிலேயே காதல்கள் என்னை துரத்தியுள்ளன. மனதை வருத்தவும் செய்துள்ளன.
அப்போது என் தந்தை விமானப்படையில் இருந்தார். நான் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் படித்தேன். குஜராத்தில் நான் மூன்றாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது என் டேபிளில் தினமும் ஒரு ரோஜாபூவும், ஒரு கடிதமும் இருக்கும். அதில் நான் உன்னை காதலிக்கிறேன் என்று எழுதப்பட்டு இருக்கும்.
இது பல நாட்கள் தொடர்ந்தது. என் வகுப்பு ஆசிரியரிடம் இதை சொன்னேன். அவர் சீரியசாக எடுத்துக்கொள்ள வில்லை.
ஒரு நாள் ரோட்டில் சாக்பீசால் பெரிய எழுத்தில் “டயானா” நான் உன்னை காதலிக்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது. என் பெற்றோருக்கு தெரிந்து கோபப்பட்டனர். எனது தாயார் பள்ளிக்கே வந்து விட்டார். விசாரணை நடத்திய போது 6-ம் வகுப்பு படித்த பையன் ஒருவன் எழுதியது தெரிந்தது. என்னை காதலிப்பதாக சொன்னான்.
இரண்டாவது காதல் சம்பவம் நான் 9 வது வகுப்பு படித்த போது நடந்தது. உயரமான அழகான பையன் என்னை கலங்கடித்தான். நானும் அவனும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஒரு நாள் தனியாக பேச வேண்டும் என்று என்னை அழைத்தான். நான் என்னுடன் தோழி ஒருத்தியை அழைத்து சென்றேன். அவன் என்னை காதலிப்பதாக துணிச்சலாக சொன்னான். எனக்கு ரொம்ப கோபம் வந்தது. எனக்கு உன்மேல் காதல் இல்லை என்று சொன்னேன். அன்றில் இருந்து அவனோடு பேசுவதையே நிறுத்தினேன்.
அப்புறம்தான் பிரச்சினை ஆரம்பமானது அந்த பையன் தற்கொலைக்கு முயற்சித்தான். அதிர்ஷ்டவசமாக அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டனர். அவன் தாயார் ரொம்பவும் அதிர்ச்சியானார். அவர் என்னிடம் தனது மகன் உயிரை காப்பாற்று என்று கெஞ்சினார். அந்த பையனோட பேசுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் அதை ஏற்றேன். பிறகு சகஜ நிலைக்கு வந்தான். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.

காதலிப்பதாக “என்பின்னால் அலைந்தவர்கள்” -நயன்தாரா



சென்னை, மார்ச். 28-

காதல் தோல்வியில் இருந்து மீண்டுள்ளார் நயன்தாரா. சிறுவயதிலிருந்தே சர்ச்சைகள் துரத்தியுள்ளன. கடைசியாக அவரை வருத்திய சம்பவம் “பையா” பட விவகாரம். சம்பள பிரச்சினையால் அதிலிருந்து விலகினார். தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடைபோட்டது. இப்போது சமரசமாகி தடை விலக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் ஆதவனில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.
காதலிப்பதாக தன் பின்னால் அலைந்தவர்கள் பற்றி மனம் திறந்தார் நயன்தாரா. அவர் சொல்கிறார்...
சிறு வயதிலேயே காதல்கள் என்னை துரத்தியுள்ளன. மனதை வருத்தவும் செய்துள்ளன.
அப்போது என் தந்தை விமானப்படையில் இருந்தார். நான் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் படித்தேன். குஜராத்தில் நான் மூன்றாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது என் டேபிளில் தினமும் ஒரு ரோஜாபூவும், ஒரு கடிதமும் இருக்கும். அதில் நான் உன்னை காதலிக்கிறேன் என்று எழுதப்பட்டு இருக்கும்.
இது பல நாட்கள் தொடர்ந்தது. என் வகுப்பு ஆசிரியரிடம் இதை சொன்னேன். அவர் சீரியசாக எடுத்துக்கொள்ள வில்லை.
ஒரு நாள் ரோட்டில் சாக்பீசால் பெரிய எழுத்தில் “டயானா” நான் உன்னை காதலிக்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது. என் பெற்றோருக்கு தெரிந்து கோபப்பட்டனர். எனது தாயார் பள்ளிக்கே வந்து விட்டார். விசாரணை நடத்திய போது 6-ம் வகுப்பு படித்த பையன் ஒருவன் எழுதியது தெரிந்தது. என்னை காதலிப்பதாக சொன்னான்.
இரண்டாவது காதல் சம்பவம் நான் 9 வது வகுப்பு படித்த போது நடந்தது. உயரமான அழகான பையன் என்னை கலங்கடித்தான். நானும் அவனும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஒரு நாள் தனியாக பேச வேண்டும் என்று என்னை அழைத்தான். நான் என்னுடன் தோழி ஒருத்தியை அழைத்து சென்றேன். அவன் என்னை காதலிப்பதாக துணிச்சலாக சொன்னான். எனக்கு ரொம்ப கோபம் வந்தது. எனக்கு உன்மேல் காதல் இல்லை என்று சொன்னேன். அன்றில் இருந்து அவனோடு பேசுவதையே நிறுத்தினேன்.
அப்புறம்தான் பிரச்சினை ஆரம்பமானது அந்த பையன் தற்கொலைக்கு முயற்சித்தான். அதிர்ஷ்டவசமாக அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டனர். அவன் தாயார் ரொம்பவும் அதிர்ச்சியானார். அவர் என்னிடம் தனது மகன் உயிரை காப்பாற்று என்று கெஞ்சினார். அந்த பையனோட பேசுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் அதை ஏற்றேன். பிறகு சகஜ நிலைக்கு வந்தான். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.

நான் கடவுள்-திரை விமர்சனம்



கடவுள் நானே என கூறிக் கொள்ளும் இளம் சாமியார் துஷ்டர்களை அழிக்கும் கதை...
அழகன் தமிழ்மணி மகன் ஆர்யா. ஜோதிடர்கள் ஆர்யா ஜாதகத்தால் குடும்பத்துக்கு ஆபத்து என பயமுறுத்த சிறு வயதிலேயே காசியில் அனாதையாக விடுகின்றனர்.
அங்கு தங்களை கடவுள் அவதாரமாக பாவிக்கும் சாமியார்களிடம் வேத மந்திரங்கள் படித்து வளர்கிறார். பற்றுகளை துறந்து முழு சாமியாகிறார்.
ஜோதிடர்கள் “கெடு” காலம் முடிந்து ஆர்யாவை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் தமிழ்மணி. வீட்டில் தாய், தங்கை சொந்த பந்தங்களுடன் பழக மறுத்து விலகியே இருக்கிறார். அங்குள்ள மலைக்கோவில் ஒன்றில் தங்குகிறார்.
இன்னொருபுறம் வில்லன் தாண்டவன் சிறுவர், சிறுமி களை விலைக்கு வாங்கி பிச்சை எடுக்க வைக்கிறான். பார்வையிழந்த பூஜாவையும் கடத்தி பிச்சை எடுக்க பயன்படுத்துகிறான். எல்லோரையும் பாதாள அறைக்குள் அடைத்து சித்ரவதை செய்கிறான்.
முகம் கோரமான அருவெறுப்பான ஒருவன் தாண்டவனுக்கு நிறைய பணம் கொடுத்து பூஜாவை தனக்கு கட்டி வைக்க நிர்ப்பந்திக்கிறான். அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடி ஆர்யா காலை பிடித்து காப்பாற்ற மன்றாடுகிறார். ஆர்யா ருத்ர தாண்டவத்தில் எதிரிகளை சின்னா பின்னமாவது கிளைமாக்ஸ்...
பக்தர்கள் வெள்ளம், கங்கையில் பிணங்கள் வீச்சு, சாமியார்கள் என காசியின் முழு பரிணாமத்தையும் விழிகளில் பிரமாண்டமாய் பதித்தபடி காட்சிகள் விரிகிறது. சாமியார்களின் தவ வலிமை, பிச்சை எடுப்பவர்களின் வலிகள் என கேமராக்கள் எட்டியாராத உயிரோட்டமான கதையை திரையில் செதுக்கியுள்ளார் இயக்குனர் பாலா.
கதாபாத்திரங்களில் கொஞ்சமும் சினிமா வாடை எழாமல் யதார்த்தம்.
நீண்ட தாடி, எலும்பு மண்டை ஓடு மாலை, மந்திரம், வசிய பார்வை, என காவி சாமியாராய் வாழ்கிறார் ஆர்யா. கங்கை நதியோரம் தீயவர்களை நொறுக்கி ஒருவனை தூக்கி பந்தாடி கீழே போட்டு அதே வேகத்தில் அவன் மேல் தவக்கோலத்தில் உட்காருவது அதிர்கிறது.
கொலை வழக்கில் கோர்ட்டில் நீதிபதியிடம் நானே பகவான். வாழ தகுதி இல்லாதவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பேன் என வாதம் செய்வது கம்பீரம்...
கிளைமாக்சில் பார்வையனாலே தாண்டவனின் கெடுதல்களை அளந்து ஓட ஓட விரட்டி சம்காரம் செய்வது விறு விறுப்பு...
பூஜா அசல் பார்வை இழந்த பெண்ணாக “ஸ்கோர்” பண்ணுகிறார். தாண்டவனிடம் சிக்கி அல்லோப்படுவது பரிதாபம்... இறுதியில் கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட சித்ரவதையில் இருந்து மீள என்னை கொன்று விடுங்கள் என ஆர்யாவிடம் கெஞ்சும்போது விழிகளில் நீர் கசிவு...
ஆர்யா, பூஜா போட்டி போட்டு விருதுக்குரிய நடிப்பை பிழிந்துள்ளனர். பிச்சை எடுப்போரை கண்காணிக்கும் வேடத்தில் வரும் கிருஷ்ணமூர்த்தி மனதாபிமானத்தில் மனதில் நிற்கிறார். பிச்சை எடுக்கும் சிறுவர்களும், சிரிப்பும், அழுகையுமாய் அழுத்தம்.
இளையராஜா இசையில் நர்த்தனம். பாடல்கள் மனதை வருடுகின்றன. ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு காசி அழகை அள்ளுகிறது. பிச்சை எடுப்பவர்களின் வலிகள் அக்குவேறு ஆணி வேறாய் அலசப்படுவது முகம் சுளிக்க வைக்கிறது. ஆர்யாவின் கேரக்டருக்கான தீனியும் குறைவு... ஏதோ நடந்து கொண்டே இருக்கிறார்.

சிவா மனசுல சக்தி



பொய் முகவரி கொடுத்து அறிமுகமாகும் இளம் பெண்ணுக்கும் வாலிபனுக்கும் நடக்கும் காதல் மோதல் கதை....
கொரியர் கம்பெனியில் வேலை செய்யும் சிவா கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் வரும் போது அழகான சக்தியை பார்த்து மனதை இழக்கிறான். அவளிடம் அந்த நொடியே பழகி விசாரிக்கிறான். தன்னை விமானப் பணிப்பெண் என அறிமுகம் செய்கிறாள். சிவாவும் பதிலுக்கு ராணுவ வீரராக இருப்பதாக சொல்கிறான்.
மறுதினம் சக்தி சொன்ன விமான கம்பெனிக்கு போய் தேடுகிறான். அப்படி யாரும் இல்லை என்கின்றனர். ஏமாற்றப்பட்டதால் கடுப்பாகிறான்.
ஹலோ எப்.எம். ரேடியோ அலுவலகத்துக்கு கொரியர் பார்சல் எடுத்து செல்கிறான். அங்கே சக்தி ஆர்.ஜே.வாக பணி செய்வது கண்டு அதிர்கிறான். இருவரும் ஒருவரையொருவர் ஏமாற்றியதாக வசை பொழிகின்றனர். பிறகு சந்திக்கும் போதெல்லாம் மோதிக்கொள்கிறார்கள். இந்த தகராறையும் மீறி அடி மனதில் காதல் தீ பற்றுகிறது.
ஒரு கட்டத்தில் காதலை நாசூக்காய் வெளிப்படுத்தும் சக்தி, சிவாவின் குறும்பால் அவ மானப்படுகிறாள். கோபத்தில் அவனை விட்டு விலகுகிறாள். சிவா தவறை உணர்ந்து சக்தியை நெருங்குகிறான். சக்திக்கோ வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இருவரும் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ்...
குடி. கும்மாளம் என திரியும் லோக்கல் இளைஞனுக்கும் படித்த நாகரீக பெண்ணுக்கும் இடையிலான காதலை கலகலப்பு விறுவிறுப்பு என நகர்த்தியுள்ளார் இயக்குனர் ராஜேஷ் எம்.
சிவா கேரக்டரில் வெளுக்கிறார் ஜீவா. பொய் முகவரியில் காதலியை தேடி குடும்பத்துடன் போய் மாப்பிள்ளைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் ஷகிலாவிடம் சிக்கி தவிப்பது குபீர் சிரிப்பு...
காதலி முன் கொரியர் பையனாக மாட்டி நெளிவது.. உடனேயே அவள் பொய் சொன்னது ஞாபகம் வர வெடிப்பது ரகளை.
சக்தியை பழிவாங்க கொரியரில் மதுபாட்டில், சிகரெட் பாக்கெட்டுகளை வீட்டுக்கு அனுப்பி அவள் தந்தையிடம் மாட்ட வைப்பது... குடித்து விட்டு சக்தி அலுவலகத்துக்கு போய் சட்டையை கழற்றி பிழிந்து காயவைத்து விட்டு தகராறு செய்வது ஆரவார கலாட்டா...
டாஸ்மாக் பாரில் காசு இல்லாமல் குடித்து விட்டு சந்தானத்தை மாட்டி விடுவது கிளைமாக்சில் தப்பு பண்ணிட்டேன் என்று சக்தி குடும்பத்தினர் காலில் விழுவது... காமெடியிலும் கலக்க வரும் என நிரூபித்துள்ளார்.
சக்தியாக வரும் அனுயா அழகு, கோபம், திமிர், காதலின் கலவையாய் பளிச்சிடுகிறார். விமானப் பணிப்பெண் என பொய் சொன்னதோடு ஓசையை வைத்து ஆகாயத்தில் பறக்கும் விமானத்தின் பெயரை சொல்வது.... ஜீவா வீட்டுக்கு போய் தாய், தங்கையிடம் அவனை குடிகாரன் என மாட்டி விடுவது குறும்பு தனம். பாடலிலும் படுக்கையறையிலும் கவர்ச்சி... டாஸ்மாக் பாரில் குடிகாரர்களுக்கு மத்தியில் ஜீவாவிடம் காதலை வெளிப்படுத்துவது வித்தியாசம்.
சந்தானம் காமெடி தூள்.. புது செல்போன்கள் வாங்கி வருவதும் ஜீவா வால் அவை உடைக்கப்படுவதும் வயிறு நோக வைக்கும் சிரிப்பு.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் இனிமை. ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் காதல் தத்துவம்..
மூச்சு முட்ட வசனம் பேசியே காட்சிகள் நகர்வது நெருட வைத்தாலும் கதாபாத்திரங்களின் அழுத்தம் படத்தோடு ஒன்ற வைக்கிறது.
கல கல காதல்

யாவரும் நலம்- திரை விமர்சனம்

பழிவாங்கும் ஆவிகள் கதை...

அடுக்குமாடி குடியிருப்பில் புதுவீடு வாங்கி தாய் சரண்யா, மனைவி நீதுசந்திராவுடன் குடியேறுகிறார் மாதவன். அண்ணன் குடும்பத்தினரும் அவருடன் வசிக்கின்றனர்.
வீட்டில் நடக்கும் விநோத நிகழ்வுகள் அவரை பயமுறுத்துகிறது. டெலிவிஷனில் யாவரும் நலம் தொடரில் வரும் சம்பவங்கள் தனது குடும்பத்திலும் நடப்பது கண்டு திகைக்கிறார்.
ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டர் மூலம் நடப்பவை பேய்களின் கைங்கரியம் என உணர்கிறார். ஒரு கட்டத்தில் தொடரில் வரும் கதாபாத்திரங்கள் கோடூரமாய் கொல்லப்படுகின்றனர். அதுபோல் தனது குடும்பத்தினரும் சாகடிக்கப்படலாம் என அஞ்சுகிறார். அவர் பயந்த மாதிரியே ஒருவன் வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினரை கொல்ல பாய்கிறான். அவர்களை மாதவன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ்...
வெள்ளை சேலை மோகினிகள் கோர உருவங்கள் நாய், நரி, உளளைகள் பாய்ச்சி என்ற வழக்கமான பார்முலா இல்லாத “ஹைடெக்” பேய் படம். பயத்தை ஸ்லோமோஷனில் ஏற்படுத்தி போக போக சீட் நுனிக்கு நகர வைத்து நடுங்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் விக்ரம் கே.குமார். தமிழ் சினிமா இதுவரை பார்க்காத புது திகில் கதையை சொல்லி திகில்படுத்தியுள்ளார்.
லிப்ட்டில் ஆபிஸ் புறப்பட தயாராகும் மாதவன் அது வேலை செய்யாததை பார்த்து படிகட்டில் இறங்க மறுநொடியே லிபட் இயங்குவது முதல் உதறல்..
டி.வி. தொடரில் வருவதுபோல் அண்ணனுக்கு சம்பள உயர்வு கிடைப்பது... மனைவி கர்ப்பமாவது... பிறகு கீழே விழுந்து கருகலைவது... இதய துடிப்பை எகிற வைக்கிறது.
யாவரும் நலம் தொடரில் வரும் சம்பங்கள் குடும்பத்தில் நடப்பது எப்படி என்பதை அறிய அத்தொடர் படமாகும். ஸ்டுடியோவுக்கு சென்று பார்க்கும்போது அங்கு கேம்ஷோ நடப்பதை கண்டு அதிர்வதும் தன் வீட்டு டி.வி.யில் மட்டும் அத்தலைப்பில் வேறுமாதிரி நடிகர்களும் கதையும் நகர்வது அறிந்து உறைவதும் குலைநடுங்க வைக்கிறது.
டி.வி. தொடரில் கொலை ஆயுதத்துடன் தன் உருவத்தை பார்த்து குடும்பத்தை கொல்லப்போகும் கொலையாளி நான் தான் என நண்பனிடம் சொல்லி அறைக்குள் அடைத்து பூட்ட வைப்பது...
பிறகு நிஜகொலைகாரன் தன்னால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட டாக்டர் என்பதை அறிந்து பிடிக்க அறைக்குள்ளேயே அலறிதுடிப்பது திகிலின் உச்சம்...
பல வருடங்களுக்கு முன் டாக்டரால் கொல்லப்பட்டவர்கள் டி.வி. தொடர்கதாபாத்திரங்களாக வந்து கொலையாளிகயை பழிதீர்ப்பதாக கதையை முடிப்பது கைகுலுக்க வேண்யடிய டைரக்டரின் புத்திசாலித்தனமான புது சிந்தனை.
மாதவன் பாத்திரத்துக்கு கச்சிதமாய் பொருந்தகிறார். பயத்தை முகத்தில் பிரதிபலிக்கும் விதம் அற்புதம்... சரண்யா நீது சந்திரா பார்வையற்ற முதியவராக வரும் சட்டர்ஜி, மனநோயாளி, போலீஸ் அதிகாரி என அனைத்து கேரக்டர்களும் வலுவாக செதுக்கப்பட்டுள்ளன.
பல அடுக்கு குடியிருப்பில் வேறு குடித்தனங்களை காட்டாதது ஆங்கில பேப்பரில் தமிழ் எழுத்துக்கள் வருவது என்ற சிறுசிறு குறைகள் விறுவிறுப்பான கதையில் மறக்கடிக்க செய்கின்றன.

பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்தின் இன்னொரு ஹீரோ, காட்சிகளை ஜீவன் இழையோட அள்ளி தெளிக்கிறார். டப்பி-பரீக்கின் பின்னணி இசையும் மிரட்டுகிறது.

ஹாலிவுட் சாயலில் ஒரு திகல் படம்.

அருந்ததீ திரை விமர்சனம்


ஆவியை அழிக்கும் மறு ஜென்ம பெண் கதை...

கந்தர்வகோட்டை ராஜ குடும்பத்து பெண் அருந்ததி. சிறு வயதிலேயே வாள் சண்டை நடன கலையில் தேறுகிறாள். அவள் அக்காவை மணக்கும் பசுபதி சமஸ்தான சொத்தை அபகரிக்க முயல்கிறான். பெண்களை கடத்தி கற்பையும் சூறையாடுகிறான். அவன் கொடுமை தாங்காமல் அக்கா தூக்கில் தொங்கி இறக்கிறாள்.
ஆவேசமாகும் அருந்ததி பொது மக்கள் கையாலேயே அடித்து பசுபதியை சாகடிக்க உத்தரவிடுகிறாள். செத்து விட்டதாக அவனை காட்டுக்குள் போடுகின்றனர். அகோரர்கள் அவனை காப்பாற்றி விடுகின்றனர். அவர்களிடம் கடும் பயிற்சி எடுத்து அமானுஷ்யசக்தி கொண்டவனாக மாறுகிறான் பசுபதி.
வெறியோடு கந்தர்வ கோட்டை சமஸ்தானத்தில் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் அழிக்கிறான். அருந்ததியை கெடுக்க முயல்கிறான். எதிரிகளை வீழ்த்தும் நடன கலையால் அவனுடன் மோதி வீழ்த்துகிறாள். உயிரோடு அவனை சமாதியாக்குகிறாள். ஆனாலும் அவன் தீய சக்தி ஊரெங்கும் நோயை பரப்புகிறது. மறு பிறவி எடுத்து வந்து பசுபதியை அருந்ததி அழிப்பது கிளைமாக்ஸ்.
தெலுங்கில் இருந்து தமிழில் வந்திருக்கும் படம். பாழடைந்த பங்களா அதற்குள் பதுங்கும் ஆவி என ஆரம்பமே திகிலுட்டுகிறது. அருந்ததியை வரும் அனுஷ்கா சந்திரமுகியை நினைவூட்டுகிறார். மறுபிறவி எடுத்த அவரை பங்களாவுக்குள் சமாதியான ஆவி பழிவாங்க கந்தர்வகோட்டைக்கு வர வைப்பது திக் திக்...
மனோரமா சொல்லும் கந்தர்வகோட்டை பிளாஸ் பேக் கதை பரபர... நடனமாடி பசுபதியை அனுஷ்கா வெட்டி சாய்ப்பது... அவனை அழிக்க வரம் வேண்டி முனிவர்களை தேடி அலைவது... மறு பிறவி மூலம்தான் விழ்த்த முடியும் என அறிந்ததும் தலையில் தேங்காய்களை அடிக்க வைத்து மண்டை உடைந்து சாவது.. விறுவிறு சீன்கள்....

சமாதியில் இருந்து வெளி வரும் ஆவி செய்யும் அட்டகாசங்கள் திகிலுட்டுகிறது. ஆவியை அனுஷ்கா அழிக்கும் கிளைமாக்ஸ் மிரள வைக்கிறது.

ஆவி பசுபதியாக வரும் சோனு சூட் மிரட்டுகிறார். பேய் விரட்டும் முஸ்லிம் பெரியவராக வரும் சாயாஜி ஷிண்டே அழுத்தம்.

வரலாற்று கால கதையை இக்கால கட்டத்துடன் இணைத்து அனல் பறக்க படமாக்கிய இயக்குனர் தோடி ராமகிருஷ்ணா திறமை பளிச்சிடுகிறது. கோட்டியின் பின்னணி இசை, கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு பலம் சேர்கின்றன.

மிஸ்.சென்னை

மின்னஞ்சலில் வந்த மிஸ் சென்னை சம்யுக்தாவின் படங்களைப் பார்த்ததும் தம்பி விக்கியின் நினைவு தான் வந்தது. கொஞ்ச நாளா கொஞ்சம் மருத்துவம், சமூகம் என சீரியஸ் விஷயங்களையே பேசிக்கொண்டிருந்ததால், ரொம்ப சீரியஸா எழுதறீங்களே கொஞ்சம் மொக்கை போட வசதியா ஒரு பதிவு போடுங்களேன் என்று கேட்டிருந்தான்.

(இன்னும் திருமணமாகாத) அவனுக்கான ஒரு சிறப்புப் பதிவு இந்தப் படங்கள்.

இந்தப் பெண்ணின் பெற்றோருக்கு எனது பாராட்டுகள் !
(கவிதை நல்லா இருந்தா எழுதறவனைப் பாராட்டுறது தானே முறை )

வெறும் படம்னா எப்படி, ஒரு நாலு வரிக் கவிதையாச்சும் வேண்டாமா ?

இல்லை என்றால் தாங்காது - மனம்
குருவி சேர்த்த சிறு கூடு
வெப்பம் வீசிப் போகாதே இது
பனியில் செய்த சிறு வீடு.

காதல் மட்டும் இல்லை என்றால்
பூக்கள் கூடச் சிரிக்காது,
நீ காதல் இல்லை என்றால் கண்ணே
கண்ணீர் பயணம் நிற்காது.

இப்படித் துவங்கும் இதயமாற்றம்
எப்படி முடியும் நானறியேன் - உன்
பொன்னடிப்பாத மண்ணடிச் சுவட்டில்
எப்படிப் புதைந்தேன் நானறியேன்.

இரு சிரிப்புக் கிடையே நீ மூச்சு விடு கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சுக்குள் காதல் மொழி கெஞ்சும்
ஒரு யுகத்தின் காலடியில் ஓரே கவிதை மிஞ்சும்
இருந்தாலும் உன் அழகில் போட்டியிட அஞ்சும்.

வெட்டிச் செல்லும் மின்னல் தன்னில்
உன்னைக் காண்கிறேன் - நீ
கொட்டிச் சென்ற காதல் மண்ணில்
பூக்கக் காண்கிறேன்.

சொக்கும் மணத்தின் சொந்தக்காரி - எனில்
விக்கல் வார்க்கும் வித்தைக்காரி.
கோடிக் கரத்தால் என்னை வாரி - உயிர்
மூடிக் காக்கும் பந்தக்காரி.

புன்னகை கொண்டு பேசடியே - இது
மொட்டுக்கள் நடத்தும் மாநாடு
நீ சிரித்து முடித்த பின்புதான் அவை
பூக்கப் போவதாய் ஏற்பாடு.

இறுதி மூச்சும் உந்தன் பெயரை
சொல்லிச் சொல்லி சூடாகும்,
நீ சொல்லில் சொல்லாக் காதலுக்கு
எந்த வார்த்தை ஈடாகும் ?

Thursday, March 26, 2009

அஜித்தின் பில்லா 2 -பிரமண்டமாய் தொடங்கி வைத்த ரஜினி

அஜீத், நயனதாரா, நமீதா ஆகியோரின் நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகவுள்ள பில்லா-2 படத்தின் பூஜை சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் மிக பிரமாண்டமாய் நடைபெற்றது.

Click to EnlargeClick to Enlarg
Click to EnlargeClick to Enlarge
Click to EnlargeClick to Enlarge
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூஜையில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி படத்தைத் தொடங்கி வைத்தார்.

இதில் நடிகை ஷாலினி, ஸ்ரீபிரியா, மனோரமா, ரஜினியில் பில்லா தயாரிப்பாளர் கே.பாலாஜி, நடிகர் சிவக்குமார், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் ஏரளமான ரஜினி ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் இதில் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கேஆர்ஜி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், ஏவிஎம். சரவணன், இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், தரணி, சரண், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் நிகழ்ச்சியில் தலையை காட்டினர்.

படத்தின் ஹீரோயின் நமீதா நச் என்று வந்திருந்தார். சிவப்பு நிற குட்டை ஸ்கர்ட்டில் வந்து அனைவரையும் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தார். ஆனால், நயனதாராவைக் காணவில்லை.

பில்லா-2வை தமிழ் திரையுலகினர் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி கொண்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் அஜீத் தனது ரசிகர்களுக்கு பில்லா-2 மூலம் பெரும் விருந்து வைக்க ரெடியாகி விட்டார்.
சினிமா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates